என்னை கொலை செய்ய திட்டம், ரோ புலனாய்வின் திட்டம் மோடிக்கு தெரியாது.. – மைத்திரி…

இந்தியாவின் ரோ புலனாய்வு அமைப்பு, தம்மை கொலை செய்ய திட்டமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(16) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளதாக தெ ஹிந்து (The Hindu)செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க மாட்டார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் குறித்த செய்தித்தாள் கூறியுள்ளது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள ஜனாதிபதியின் ஊடகப்பிரிவை தொடர்பு கொண்ட போதும் அச்சுக்கு செல்லும் வரை அந்தப்பிரிவு அந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்றும், ஜனாதிபதியின் இந்தக் குற்றச்சாட்டு இலங்கை இந்திய உறவில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்றும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.