உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து மீள முடியும்.
எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பராமரித்துவந்தால், சருமம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து மீள முடியும்.
பொதுவாக, முகத்தில் உள்ள சருமத்தைப் பாதுகாக்க கிளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங், சன்ஸ்க்ரீன் ஆகிய நான்கையும் சரிவரச் செய்தால், சருமம் அன்று பூத்த மலராக மென்மையுடன் இருக்கும்.
# முகத்தில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்த, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம். சருமத்தின் துவாரங்கள் திறந்து தூசுக்கள், அழுக்குகள் நீங்கும். பிறகு, டர்க்கி டவலால் டோனிங் செய்யுங்கள்.
# உள்ளங்கையில் ஐந்து சொட்டு டோனரைவிட்டு, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கவேண்டும்.
# சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போனால், வாடிவிடும். மாய்ஸ்ச்சரைசரைப் போட்டு நன்றாகத் தடவிப் படரவிட வேண்டும்.
# தோலில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருப்பதால், வறண்ட சருமம் ஏற்படுகிறது. இதனால் வெள்ளைத் திட்டுக்கள், அரிப்பு, கரும்புள்ளிகள், வெடிப்புகள், தேமல் போன்றவை ஏற்படலாம். வறண்ட சருமத்தினர் கோடையை எண்ணி கலங்கவேண்டியது இல்லை. ஆனால், இத்தகையவர்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து சமாளிக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
# குளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய்விட்டுக் குளிக்கலாம். இது சருமத்தில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்க உதவும்.
# தினமும் குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.
# சந்தன பவுடர், பச்சைப் பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, முல்தானி மட்டி பவுடர், ரோஜா இதழ்தூள் இவற்றைக் கலந்துவைத்து, சருமத்தில் தேய்த்துக் குளித்துவர, வறட்சி நீங்கி, தோல் பளபளக்கும்.
# கொழுப்பு உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.