எப்போதும் உங்கள் முகம் பளபளப்பாக இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க…

என்னதான் நமக்கு வேலை இருந்தாலும் நமது முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது. நம் வீட்டுலே இருக்கும் பொருட்களை கொண்டு அழகு பெற்றால் நன்று. முட்டையை வைத்து செய்யும் ஃபேஸ் மாஸ்க் பற்றி இந்த பதிவில் தெரிஞ்சிக்கலாம்.

எண்ணெய் சருமம்:
பலருக்கு அடிக்கடி முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும். இதனை சரி செய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்கள்.

தேவையானவை :-
முட்டை
எலுமிச்சை சாறு

செய்முறை :-
முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து, அதனை நன்கு அடித்து கொள்ளவும். பின்பு, எலுமிச்சை சாற்றை அதனுடன் சேர்த்து கலக்கவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 30 நிமிடம் வரை முகத்தில் போட்டு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் எண்ணெய் சருமம் மிகவும் ஈரப்பதமான சருமமாக காட்சியளிக்கும். மேலும் சென்சிடிவ் ஸ்கின் உடையவர்கள் இந்த ஃபேஸ் மாஸ்க்கை கண் மற்றும் வாய் ஆகிய பகுதிகளில் போடுவதை தவிர்க்கவும்.

எரிச்சல் முகம்
முகம் ரொம்ப எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுவர்கள்.
உங்கள் முகத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை இந்த ஃபேஸ் மாஸ்க் நீக்கி, மென்மையான முகத்தை தருகிறது.

தேவையானவை :-
தேன்
முட்டை
தயிர்
வெள்ளரிக்காய் சாறு

செய்முறை :-
முதலில் 1/2 வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் அடித்து கொண்டு, அதில் சிறிது மிதமான சூட்டில் சூடு செய்த 1 டீஸ்பூன் தேனை கலக்கவும். 1/2 கப் தயிர் மற்றும் வெள்ளரி சாற்றை அதனுடன் கலந்து 15 நிமிடம் முகத்தில் பூசவும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் எரிச்சல் கொண்ட முகத்தை மென்மையாக மற்றும்.

சுருக்கங்கள் கொண்ட முகம்
இளம் வயதிலேயே முகம் முழுக்க சுருக்கங்கள் உள்ளவர்கள் இந்த ஃபேஸ் மாஸ்க் உபயோகித்து பாருங்கள்.

தேவையானவை :-
முட்டை
தேன்
ஓட்ஸ்

செய்முறை :-
முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் ஓட்ஸை பவ்டராக்கி அதில் கலந்து கொள்ளவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 20 நிமிடம் முகத்தில் பூசி பிறகு காட்டன் துணியால் துடைத்துவிடவும். இவ்வாறு செய்தால் இழந்த இளமையான முகத்தை மீண்டும் பெற்றுவிடுவீர்கள்.

முகத்தை சுத்தம் செய்ய:
அதிகரித்து வரும் காற்று மாசுவால் உங்கள் முகம் மிக கருமையாக அழுக்குடன் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் அழுக்குகள் நிறைந்த முகத்தை சுத்தம் செய்து பளபளப்பாக மாற்றும்.

தேவையானவை :- –
முட்டை
தயிர்

செய்முறை :-நன்றாக அடித்த வெள்ளை கருவை 2 டீஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 2 வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் சருமம் சுத்தமடைந்து மொழு மொழுவென மின்னும்.