கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பை டிரம்ப் இரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 12-ம் திகதி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரது பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது பேச்சுவார்த்தைக்கு உகந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பை டிரம்ப் இரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை மந்திரி கிம் கை குவான் கூறுகையில், வர்டகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
எப்போது வேண்டுமானாலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார்.