துருக்கியிலுள்ள விமான நிலையத்தின் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்டிருக்கலாம் என துருக்கி பிரதமர் பினாலி யில்ட்ரிம் ( Binali Yildirim) தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டுக்குள் பயங்கரவாதம் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. எமது நாடு பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளது. ஒவ்வொரு குடிமகனையும் இந்த நேரத்தில் ஒன்றுபடுமாறு அழைக்கின்றோம். ஒருவர் இன்னொருவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் பிரதமர் ஊடகங்களில் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.