எமில் ரஞ்சனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 16ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று(02) உத்தரவிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(02) ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.