2012 ம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட தூப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் 19ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவத்தில், சிறைக் கைதிகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எமில் ரஞ்சன் இதன் போது சிறைச்சாலைகள் ஆணையாளராகவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.