வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது 27 பேர் பலியாகிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் 03ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(19) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.