(FASTGOSSIP|COLOMBO) – ஷங்கரின் 2.0 படத்தில் நடித்த பிறகு பட வாய்ப்புக்காக காத்திருந்த எமி ஜாக்ஸனுக்கு எதுவும் கைகூடாத நிலையில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு முன்னதாக அவர் குழந்தை பெற முடிவு செய்துள்ளார். தற்போது எமி பாணியில் மற்றொரு நடிகை திருமணத்துக்கு முன் கர்ப்பமாகியிருக்கிறார்.
தமிழில் அஜீத்தின் ‘பில்லா 2’ படத்தில் நடித்தவர் புருனா அப்துல்லா (bruna abdullah). எமியை போலவே புருனாவும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புருனா வெளியிட்டிருப்பதுடன் இன்னும் 5 மாதங்களில் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
திருமணத்தில் நம்பிக்கையில்லாத ஒரு சில நடிகைகள்போல் புருனாவும் திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாதவர். இதுபற்றி அவர் அளித்த பதில் ஒன்றில்,’திருமணச் சான்றிதழ் என்பது ஒரு பேப்பர்தானே தவிர வேறொன்றும் இல்லை’ எனக் குறிப்பிட்டார்.
‘I HATE LOVE STORYS’கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். புருனாவுக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண திகதி இன்னும் முடிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.