எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமில் தர்மரத்னவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் மரண சான்றறிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே  எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.