இதுவரையில் எந்த வித தயாரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத எம்பிலிப்பிட்டி கடதாசி கைத்தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை நவீனமயப்படுத்திய பின்னர் தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ‘கொரியன் ஸ்பா’ என்ற நிறுவனத்தினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 1200 மில்லின் ரூபா முதலீட்டுடன் பொதியிடும் பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடதாசி வகைகளை தயாரிப்பற்காக இந்தத் தொழிற்சாலை ‘கொரியன் ஸ்பா’ என்ற நிறுவனத்துக்கு குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.