எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவருக்கு 03 மாத சிறைத்தண்டனை…

எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே. அமிலுக்கு எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று(17) மூன்று மாத சிறைத்தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.