எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் சுமித் பிரசன்ன ஜெயவர்த்தன எனும் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 12 பொலிஸாருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எம்பிலிபிடிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 12 பேருக்கு எதிராகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆராய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட குழுவினர் குறித்த குற்றப் பத்திரிகையை தயாரித்துள்ளனர்.
இது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று கூடவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தீர்மானிக்கவுள்ளதாகவும் ஆரியதாஸ குரே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.