எம்பிலிபிட்டிய விவகாரம் – முன்னாள் உதவி காவற்துறை அத்தியட்சகருக்கு பிணை

எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது காவற்துறையுடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சுமித் பிரசன்னவின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எம்பிலிப்பிடிய முன்னாள் உதவி காவற்துறை அத்தியட்சகர் டி.டப்ளியூ.சீ. தர்மரத்தன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பரகமுவ மாகாண உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இதற்கமைய ரூபா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை மற்றும் 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.