எம்பிலிப்பிட்டிய கொலை சம்பந்தமான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக

கடந்த வாரம் எம்பிலிப்பிட்டிய நகரத்தில் இடம்பெற்ற இளைஞன் ஒருவரின் கொலை சம்பந்தமான விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நிறைவு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சீ்.டீ.விக்கிரமரத்னவின் தலைமையின் கீழ் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே இந்த விசாரைணைகளை நிறைவு செய்ய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், கொல்லப்பட்ட அந்த இளைஞனின் கொலை தொடர்பாக இதற்கு முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் தற்போது முன்னெடுத்து வரும் விசாரணைகளில் அவை தெளிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.