எம்பிலிப்பிட்டிய விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

எம்பிலிப்பிட்டிய நகரிலுள்ள மெண்டிஸ் கட்டடத்தில் நடந்த வைபவமொன்றின் போது மேல்மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலதிக நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையொன்று மேற்கொள்ளப்படும்போது உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்படுமாயின், ஆணைக்குழுவின் விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என்பதே சாதாரண சட்ட சம்பிரதாயமாகும் எனவும், அதனால் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் பிரகாரம் அடுத்தபடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.