எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புச் செயற்பாட்டாளராக உந்துல் பிரேமரட்ன உள்ளிட்ட குழுவினர் இந்த முறைப்பாட்டை நேற்று பொலிஸ் மா அதிபரிடம் செய்துள்ளனர்.
இதேவேளை, மோதல் இடம்பெற்ற பிரதேசத்திற்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் சீ.சீ.டி.வி கமரா காட்சிகள் பற்றிய படங்களை நேற்றைய தினம் ஊடகங்கள் வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.