தமது தந்தை பயணித்த விமானம் காணாமல் போன சம்பவம் தொடர்பில், மலேசியன் ஏர்லைன்ஸ் கவனக் குறைவாக இருந்தது என மலேசியாவின் விமான நிறுவனத்துக்கு எதிராக அந்நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறார்கள் கொண்டுவந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது
தங்களுக்கு வழங்கப்படவுள்ள நட்ட ஈட்டை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர்களது தாய் தெரிவித்துள்ளார். எனினும் நட்ட ஈட்டுத் தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.
காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் தமது விமானம் காணாமல் போன சம்பவத்தை ஒரு விபத்து என்று மலேசியா அறிவித்துள்ளது.