எம்.பி ஒருவரின் முன்னுதாரணம்!!!

அதிகாரமும், பலமும் பலரது கண்களை மறைத்து விடுவது இவ்வுலகில் சாதாரணமாக நடைபெறும் விடயமாகும்.

எனினும் , ஒரு சிலர் இதற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

அந்தவகையில், ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹசு மாரசிங்க கறுவாத்தோட்டை பொலிஸில் பொதுமக்களோடு பொதுமகனாக காத்திருந்து தனது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுச் சென்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

போக்குவரத்து வீதிமீறல் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை இழந்த அவர் அதனை பொலிஸில் காத்திருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

இத்தகைய செயல்பாடுகள் சில வேளைகளில் சுய விளம்பரமென குற்றஞ்சாட்டப்பட்டாலும், இதன்மூலமாவது, இவரைப் பார்த்து பலரும் திருந்தட்டுமே…