எம்.பி.பத­வியை பெறு­வ­தற்கு பொன்­சேகா தயா­ரில்லை – அனோமா பொன்­சேகா

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை பெற்றுக் கொள்­வ­தற்கு தனது கணவர் தயா­ரில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் மனைவி அனோமா பொன்­சேகா தெரி­வித்­துள்ளார்.

மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குண­வர்­த­னவின் இடத்­திற்கு சரத் பொன்­சேகா நியமிக்கப்படவுள்ளதாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலை­யி­லேயே, அனோமா பொன்­சேகா ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்­நி­லையில் குறித்த பத­விக்­காக பலரின் பெயர்கள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், சரத் பொன்­சே­காவின் பெயரும் அதில் அடங்­கு­வ­தா­கவும் ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் கூறி­யி­ருந்தார்.

இது தொடர்பில் இறுதி முடிவை ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் இணைந்து மேற்­கொள்­வார்கள் எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­வேளை எதிர்­வரும் 9 ஆம் திகதி புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யேற்­க­வுள்­ள­தா­கவும் அதில் சரத் பொன்­சே­காவின் பெயர் இன்­னமும் உறுதியாகவில்லை எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.