எரிபொருள் விலை குறைப்பு…

நேற்று(11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல் 123 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 147 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் 99 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 118 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

அதன்படி , ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 131 ரூபாவாகவும் , ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 150 ரூபாவாகவும் ஐஓசி குறைத்துள்ளது.

மேலும், 101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும், 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.