எரிபொருட்களுடன் சென்ற புகையிரதம் தடம்புரள்வு…

(FASTNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து எரிபொருட்களுடன் சென்ற புகையிரதம் ஒன்று அநுராதபுரம் நோக்கிச் சென்றபோது இன்று அதிகாலை சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.