எரிபொருள் புகையிரத சாரதிகள் நேற்று(26) மாலை முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு இன்று(27) காலை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
எரிபொருள் புகையிரத சாரதிகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று இடம்பெற்ற சந்திப்பில் எரிபொருள் புகையிரத சாரதிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புகையிரத செலுத்துனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டார்.