கனியவள ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக கருதி எரிபொருள் விநியோகம் இராணுவத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை இன்று காலை முதல் இராணுவம் மேற்கொள்ளும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி சிறிசேன பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு உடனடியாக வேலைக்கு திரும்பும்படி கனியவள ஊளியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சில நிமிடங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 15 நிமிடங்களில்…
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தை நாளை(04) முடிவுக்குக்கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்து, 34 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம்…
மோதரை, அளுத்மாவத்தை மாதம்பிட்டிய சந்தியில் இருந்து பஞ்சானந்த மாவத்தை வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி நேற்று(15) இரவு 10.00 மணி முதல்…