எரிபொருள் விலைகள் இன்று(21) நள்ளிரவு முதல் குறைப்பு..

எரிபொருள் விலைகளை இன்று(21) நள்ளிரவு முதல் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று(21) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 பெட்ரோல் விலையானது 10 ரூபாவினாலும் (முறையே ரூ.125, ரூ.149), ஓட்டோ டீசல் 05 ரூபாவினாலும் சூப்பர் டீசல் 10 ரூபாவினாலும் (முறையே ரூ.101, ரூ.121) குறைக்கப்படவுள்ளது.