எரிபொருள் விலைகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்.

எரிபொருள் விலைகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த விலை வீழ்ச்சியின் பலன்களை உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் அரசாங்கம் விலை குறைப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஒன்று முதல் மூன்று மாத காலப் பகுதிக்குள் எரிபொருள் விலையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் விலைப் பொறிமுறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எரிபொருள் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த விலைப்பொறிமுறைமை குறித்த யோசனை இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இன்றைய தினம் நிதி அமைச்சின் பரிந்துரைகளையும் கவனத்திற் கொண்டு எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு பதிலளிக்க நிதி அமைச்சு ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.