எரிபொருள் விலை அதிகரிப்பினால் மின் கட்டணமும் அதிகரிப்பு…

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால், மின்கட்டணம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக, மின்சார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை அதிகளவில், டீசலை கொண்டே மின்னை உற்பத்தி செய்து வருகின்றதாக, இலங்கை மின்சார சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் ரன்ஜன் ஜயலால் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், டீசல் விலை அதிகரிப்பு காரணமாக மின் கட்டணம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.