உலக சந்தையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் விலை 36 டொலருக்கு குறைந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் ஸீ.ஜீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விலை குறைப்பினால் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்துக்கு முகம்கொடுத்தது. இதனால், மீண்டும் ஒரு முறை விலை குறைப்பை மேற்கொள்ள முடியாது.
எது எப்படிப் போனாலும், அடுத்த வருடம் அமுலுக்கு வரவுள்ள சூத்திரத்துக்கு ஏற்ப, எரிபொருள் விலை ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சந்தை நிலவரத்தைப் பொருத்து இந்த சூத்திரம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையை மாற்றும் எனவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.