எரிபொருள் விலை சீர்த்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று(10) கூடுகிறது..

(FASTNEWS | COLOMBO)- உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில், இன்று(10) பெரும்பாலும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என நிதியமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது, புதுவருடத்தின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.