உலக சந்தை விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைய இலங்கையின் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் குழு கூட்டம் இன்று(10) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கூட்டத்தில், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தல் அல்லது குறைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில், கனியவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதி, திரைசேரியின் பிரதி செயலாளர் மற்றும் திரைசேரியின் பணிப்பாளர்கள் இருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.