கென்யாவில் எரிவாயு டேங்கர் லொரியும் மினி பேரூந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேரூந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர் என சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து தொடர்பாக கெரிசோ பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.