எல்லை நிர்ணய அறிக்கை அடுத்து வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படுமென தெரிவித்துள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா எதிர்வரும் ஜுலை மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில்எல்லை நிர்ணய அறிக்கை அடுத்து வாரம் வெளியிடப்படுமென தெரிவித்துள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா எதிர்வரும் ஜுலை மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நேற்று(08) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பைசர் முஸ்தபா “தேர்தல்கள் ஆணையாளருடன் நாளை[இன்று 09] சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது அதன் பின்னர் எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் பிரசுரிக்க எதிர்ப்பார்த்துள்ளோம். இது தொடர்பில் 2 அல்லது 3 நாட்களில் ஆராய்ந்து பார்த்து இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளோம். அசோக பீரிஸும் நாளை[இன்று] நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். அடுத்த வாரம் எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிட முடியும்.
அந்த அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளாமல் தேர்தலை நடத்த முடியாது. அதனைவிடவும் கட்சித் தலைவர்களின் திருத்தங்களையும் ஏற்று அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம். ஜுலை மாதத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்துவோம். எனினும் அந்த பணி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உரியது. எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியானதும் எனது பணி நிறைவுபெறும். அதன் பின்னர் தேல்தல்கள் ஆணைக்குழுவே பணிகளை முன்னெ டுக்க வேண்டும்.”என்றார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.