எல்லை மீறிய யூசுப் – ரமீஸ் பாக்.கிரிகெட் அவமானத்தில்

டீவி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முஹமது யூசுப் மற்றும் ரமீஸ் ராஜா தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் திட்டிய வார்த்தைப் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பெரும் அவமானமாக அமைந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்றவர். தற்போது அமீர் தடை முடிந்து முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் 26 நபர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அமீரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

விவாதத்தில் மோதல்

இதற்கிடையே, அமீர் அணிக்கு திரும்பியது குறித்து பாகிஸ்தானின் “டிவி” ஒன்றில் விவாதம் நடந்தது. இதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் முஹமது யூசுப் மற்றும் ரமீஸ் ராஜா பங்கேற்றனர். திடீரென வாதம் திசைமாறி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டனர்.

முஹமது யூசுப் கூறுகையில்;

கிரிக்கெட்டிற்கு நீங்கள்(ரமீஸ்) எதுவும் செய்யவில்லை. 57 டெஸ்டில் விளையாடி வெறும் 2 சதம் மட்டுமே அடித்தீர்கள். கிரிகெட் குறித்து கதைக்க உங்களுக்கு (ரமீஸ்) அருகதையில்லை. நீங்கள் வெறும் ஆங்கில ஆசிரியர் மாத்திரமே. பணத்திற்காக குடும்பத்திற்கே வழக்கு தொடுத்தவர் தானே நீங்கள் என சாராமாரியாய் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ரமீஸ் ராஜா கூறுகையில்;

இதற்கு மேலேயும் நீங்கள் பேசுவீர்கள். பொய் பேசாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களின் வாதத்தை கட்டுப்படுத்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் படாதபாடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(riz)