பதுளை – எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், இதன்போது காயமடைந்த தாய் வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(15) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மூவரும் பதுளை வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தையும் குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மனைவி தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.