எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ள போதிலும் பாதுகாப்பு நிமித்தம் மாற்று வீதிகளை உபயோகிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக நிலவும் கடும் மழையின் காரணமாக எல்ல சந்தியில் நேற்றைய தினம் (25) மண் சரிவு ஏற்பட்டதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று காலை 06 மணி குறித்த சந்தி ஊடான வீதி தற்காலிகமாக மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.