எவன்காட் கப்பல் விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள எவன்காட் கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்னும் கடற்படையினரால் காலி துறைமுக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.