எவன்காட் சம்பவம் சர்ச்சை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து

எவன்காட் சம்பவம் தொடர்பில் தகவலளிக்க இன்று(13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அந்த சங்கம் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க சேனாதிபதி தலைமையில் இன்று காலை தலவத்துகொடவில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறும் என நேற்று குறித்த அந்த சங்கம் அறிவித்தது.

எனினும், தலைவருக்கு கடந்த மாதம் 21ம் திகதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் 41 நாட்கள் ஓய்வு அவசியம் என வைத்தியர்கள் குறிப்பிட்டதாகவும் இதனால் இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறாது எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விரைவில் அதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.