கடல்சார் பாதுகாப்பு கடமைகளை எவன்காட் நிறுவனத்திடம் இருந்து அரசு பெற்று ஒரு வருடத்தினுள் ரூபாய் 233 கோடிக்கும் அதிகமான நிதியை ஈட்ட முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி எவன்காட் நிறுவனம் கடற்படையின் கீழ் பொறுப்பேற்கப்பட்டது.
ஒரு வருட காலத்தில் 6,646 கப்பல் போக்குவரத்தில் இந்த நிதியை ஈட்ட முடிந்ததாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக ஈட்டப்பட்ட நிதியை அரசாங்க திரட்டு நிதியத்திற்கு பெற்று கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.