எவன்காட் நிறுவனத்தின் கணக்காளர் நாயகம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக திட்டமிடப்பட்டுள்ளது.
காலி பிரதான நீதவான் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே அவர் இன்று முன்னிலையாகவுள்ளார்.
காலி துறைமுகத்திலுள்ள ஆயுத களஞ்சிய கப்பல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்ற அமர்வின் போது தெரிவித்த விடயங்களின் பின்னர் குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் எவன்காட் நிறுவனத்தின் கணக்குகள் சம்பந்தமான விடயங்களை தெரிவிப்பதற்காக அவர் இன்று குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக திட்டமிடப்பட்டுள்ளது.