எவன்காட் வழக்கு விசாரணை, ஜூன் 26 ஆம் திகதி முதல்…

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோவுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் விசாரணக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வரை நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள இவர்களின் கடவுச்சீட்டுக்களை வழங்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்தி செல்ல அனுமதி வழங்குவதற்காக 355 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றமை உள்ளிட்ட 47 குற்றப்பத்திரிகைகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.