எவன்கார்ட் கப்பலின் கெப்டன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

கைதுசெய்யப்பட்டுள்ள எவன்காட் கப்பலின் கெப்டன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஜெனட் எனும் பெயருடைய 43 வயதான இவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 23ம் திகதி பிற்பகல் காலி துறைமுகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

எவன்காட் கப்பல் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தல் மற்றும் சட்டவிரோதமாக வெடிபொருட்களை தன்னகத்தை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.