சர்ச்சைக்குரிய எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரிக்க தடை விதிக்கப்பட்ட உத்தரவு இன்று(28) நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையின் தடையினை எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.