பாதாள உலகின் முக்கிய புள்ளியாக கருதப்படும் எஸ்.எப் லொக்கா என்று அழைக்கப்படும் எரோன் ரணசிங்கவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாகனத் திருட்டு ஒன்றுடன் தொடர்பு இருப்பதான சந்தேகத்தின் பேரிலேயே எரோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வருபவரான எரோன் கொலைக் குற்றச்சாட்டுக்களுடனும் சம்பந்தப்பட்டவராகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, இரவு விடுதி ஒன்றின் உரிமையாளரான வசந்த டி சொய்ஸா என்பவர் அனுராதபுரத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எரோன் பிரதான சந்தேக நபராகக் கருதப்படுபவர்.