அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் தாயார் கிரேஸ் பிரேமா பண்டிதரத்ன இன்று இயற்கை எய்தியுள்ளார்.
ஆறு ஆண்மக்கள் மற்றும் 02 புதல்விகளின் தாயாரான அன்னார் இன்று தனது 84 வயதில் இயற்கை எய்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மட்டுமன்றி, முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் சாலிய பண்டார திசாநாயக்க மற்றும் தற்போதைய மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜயலத் பண்டார திசாநாயக்க என கிரேஸ்பிரேமா பண்டிதரத்னவின் மூன்று புதல்வர்கள் அரசியல்வாதிகளாக உள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை அன்னாரது இறுதிச் சடங்குகள் ஹங்குரன்கெத்தவில் நடைபெறவுள்ளது.
அதுவரை அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக சடலம் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் ஹங்குரன்கெத்தை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.