(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
குறித்த இருவரும் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றதை அடுத்து அவர்கள் பதவி விலகியதாக கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.