அரசிலிருந்து விலகிய 16பேர் கொண்ட குழுவானது ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்துள்ளதாக கூறப்பட்ட போதிலும், குறித்த குழுவில் 14 பேரே உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த 16 பேரில், எஸ்.பீ.திசாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணையவில்லை. அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு குழுவானது, எதிர்கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.