இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில்; துடுப்பாடி வரும் ஏஞ்சலே மேத்தியூஸ் சற்றுமுன்னர் தனது 8 ஆவது டெஸ்ட் சதத்தை பெற்று கொண்டார்.
மேலும் தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாடி வருகிறார்.
போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 3 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்று துடுப்பாடி வருகிறது.
முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 7 விக்கட்டை இழந்து 536 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
#reeshma