இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலக ஏஞ்சலோ மேத்யூசிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருக்கக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் அர்ஜுன் ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் மீது பல்வேறு விமர்ச்சனங்கள் எழுந்தது.
இதைத் தொடர்ந்து மேத்யூசும் மூன்று வகையான தலைவர் பதவியில் இருந்து விலகினார்
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான அர்ஜுன் ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில்;
“..அவரை இன்னும் சில காலங்கள் தலைவராக இருக்க கூறி வலியுறுத்திருக்கலாம், ஏனெனில் அவர் தலைமையிலான இலங்கை அணி தான் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது, அவுஸ்திரேலியாவையும் வெள்ளையடித்தது..
அப்போது புகழ்ந்த அனைவரும், ஜிம்பாப்வே அணியுடன் தோற்றவுடன் அவரை வசைபாடினால், அவர் ஒரு நேர்மறையான வீரர், ஜிம்பாப்வே அணியுடன் தோற்றதற்கு அவர் தான் காரணம் எனக் கூறி, அவரை எதிர்மறையாக மாற்றி விட்டனர்.
இதன் காரணமாக அவர் தன்னம்பிக்கையும் இழந்ததால், தலைவர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டார்..” என ரணதுங்கா மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)