ஏன் நான் மொட்டை அடித்தேன் தெரியுமா?

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்திற்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கொடி வீரன்’படத்தில் மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணிமா, பசுபதி, விதார்த், பாலசரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் பற்றி சசிகுமார் கூறுகிறார்..

‘கிராமத்து பின்னணியில் அழகான அண்ணன்-தங்கை கதை ஒன்று தயார் செய்யுங்கள்’ என்று இயக்குனரிடம் கூறி இருந்தேன். அவர் எனக்காக உருவாக்கிய கதை தான் ‘கொடிவீரன்’. இந்த படத்தில் எனது தங்கையாக சனுஜா நடிக்கிறார். காதலியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ஒரு முக்கியமான பாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். 2 காட்சிக்காக மொட்டை போட்டு நடித்துள்ளார். படம் வந்த பிறகு பூர்ணா வேடம் பேசப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஏன் மொட்டை போட்டேன் என்று நடிகை பூர்ணா விளக்கி கூறியுள்ளார். “இயக்குனர் கதை சொன்ன போது படத்தின் கதை என்னை அப்ரோச் செய்தது. அதில் வரும் கேரக்டருக்கு மொட்டைஅடித்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். அப்போது நான் கொஞ்சம் தயங்கினேன்.‘கதையைக் கேட்டுவிட்டு முடிவுசெய்யுங்கள்’’ என்றார்கள். முழுக் கதையை கேட்டபிறகு, என்னுடைய கேரக்டருக்காக நான் மொட்டை அடித்துக்கொள்ள சம்மதித்தேன்’’ என்று பூர்ணா கூறியுள்ளார்.