ஏன் மஹிந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை தெரியுமா?

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளாதது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கை காரணமாகவே என, பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாமை குறித்து சில அமைச்சர்கள் பொய்யான கருத்துக்களை வௌியிடுவதாக, பாராளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணத்துங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தற்போது மேற்கொண்டு வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தகுதியான நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம் பெறப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.